Categories
தேசிய செய்திகள்

மக்களே!….. இலவசமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் …. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியமானதாகும். அதனைப் போல குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக இழப்புச் சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். அதாவது தமிழக அரசு விதிமுறைகளின் படி ஒரு குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்திருக்க வேண்டும் மற்றும் இறப்பு சான்றிதழுக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது பஞ்சாயத்திலே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை தொலைத்துவிட்டாலும் ஆன்லைன் மூலமாகவே எவ்வித செலவு இல்லாமல் விண்ணப்பித்து 2 நிமிடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் இரண்டு முறைகள் உள்ளது. அதாவது சென்னையில் வசிப்பவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதள முகவரியின் மூலமாகவும், சென்னையை தவிர்த்து பிறப்பகுதியில் வசிப்பவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள முகவரியின் மூலமாகவும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு முதலில் இந்த இணையதளம் முகவரி பக்கத்திற்கு சென்று பிறப்புச் சான்றிதழ் என்கின்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி முதல் நாள் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து உங்களுக்கு சான்றிதழ் எந்த மொழியில் வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதனையடுத்து Generate என்பதை கிளிக் செய்துவிட்டால் தேவையான சான்றிதழ் கிடைத்துவிடும். தற்போது அந்த சான்றிதழை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |