எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கு தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை மத்திய அரசு அறிவித்துள்ளது.