Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ இதெல்லாம் அவசியம்…. உடனே படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு ஆதார் கார்டு இருக்கும். ஆதார் கார்டு இல்லாமல் நாட்டில் எதுவுமே கிடையாது என்ற நிலை தற்போது உருவாகி விட்டது. இது பெரும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை வங்கியில் கூட நாம் வாங்கிக் கொள்ளலாம். இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை நாம் மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒருவருடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆதார் கார்டு விஷயத்தில் அனைவரும் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஆதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனவே உங்களது ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.

1. முதலில் ஆதார் கார்டு ஓடிபியை யாரிடமும் ஷேர் செய்யக் கூடாது.

2. ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். புதிய நம்பர் மாற்றியிருந்தால் அதை ஆதாரில் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்.

3. ஆதார் கார்டை வெரிஃபை செய்ய https://myaadhaar அல்லது uidai.gov.in வெப்சைட்டை பயன்படுத்தவும்.

4. ஆதார் தொடர்பான QR code-களை தேவையில்லாமல் ஸ்கேன் செய்யக் கூடாது.

5. ஆதார் எண்கள் பகுதி மறைக்கப்பட்ட மாஸ்க் ஆதாரை பயன்படுத்த வேண்டும்.

6. உங்களின் ஆதார் தொடர்பான தகவல்களை அறிய  மொபைல் போனில் maadhaar ஆப் டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவும்.

Categories

Tech |