Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உங்ககிட்ட எத்தனை சிம்கார்டு இருக்கு?…. உடனே டி-ஆக்டிவேட் பண்ணுங்க…. அரசு புதிய கட்டுப்பாடு….!!!

ஒரு போனில் இரண்டு சிம் கார்டு, மூன்று சிம் கார்டு என தொழில்நுட்பம் வளர வளர மொபைல் பயன்பாடும் சிம்கார்டு களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது ஒருவரே இரண்டு மூன்று போன் வைத்திருக்கின்றனர். அதனைப் போல எத்தனை சிம்கார்டு உள்ளது என்று தெரியாத அளவுக்கு சிம் கார்டுகளையும் வாங்கி குவித்தவர்கள் பலர். அதிலும் சிலர் இலவசமாக சிம் கார்டு வாங்கி விட்டு அதை ஒரு மாதம் மட்டும் இலவசமாக பயன்படுத்தி விட்டு அப்படியே அதனை தூக்கி எறிந்து விட்டு இன்னொரு சிம் கார்டு வாங்கி மீண்டும் இன்னொன்று என மாறிக் கொண்டே இருப்பார்கள்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி இனி யாரும் அளவுக்கு அதிகமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது. ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை வைத்து எத்தனை சிம்கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால் நிறைய சிம் கார்டுகளை வாங்குகின்றனர். இனி அது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் இன் படி ஒருவர் அதிகபட்சமாக 9 விழுக்காடு மட்டுமே வாங்க முடியும். அதுவும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு 6 சிம்கார்டுகள் மட்டுமே அனுமதி. நீங்கள் வைத்திருக்கும் சிம்கார்டுகள் மீண்டும் வெரிஃபை செய்யப்படும்.

அவற்றை வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். வேண்டாத சிம் கார்டுகளை டி ஆக்டிவேட் செய்து விடுவது நல்லது m சிம் கார்டுகளை வைத்து குற்றச் செயல்கள் அதிக அளவு நடைபெறுவதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு சிம் கார்டு போதுமானது. அலுவலக பயன்பாட்டுக்கு இன்னொரு சிம்கார்டு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பது உங்களுக்கு ஆபத்து தான்.

Categories

Tech |