திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு காணொளி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களுக்கு ஆபத்து என்றால் ? அதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் இந்தியை எதிர்ப்பவர்கள் கிடையாது. அதனுடைய ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என்று கூறினார்.
தமிழ் இனத்தின் மேன்மைக்காகவும், தமிழுக்காகவும் கடந்த ஆறு மாத காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.