இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அப்போது மத்திய அரசானது சிலிண்டருக்கு மானிய தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மானியதொகை வரவு வைக்கப்பட்டு வந்தது .
சமையல் சிலிண்டர் எரிவாயு விலை ஆயிரம் ரூபாய் தாண்டியுள்ள இந்த நேரத்தில் மானிய தொகையை சிலருக்கு வரவு வைக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கடந்த வருடங்களில் மானிய தொகை பலருக்கு குறைக்கப்பட்டதாகவும் சிலருக்கு மானிய தொகை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு சிலிண்டர் மானிய திட்டத்திற்கு கூடுதலாக 30,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
முன்னதாக சிலிண்டருக்கு மானியமாக ரூபாய் 200 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றவாறு தற்போது மானிய தொகை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் எந்த வித இடைநிறுத்தமும் இன்றி மானிய தொகை கூடுதலாகவும் வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.