இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் தங்கத்தின் விலையைக் காட்டிலும் பெட்ரோல் டீசலின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வரலாறு காணாத வகையில் லிட்டருக்கு பெட்ரோல் ரூபாய் 100க்கு மேல் சென்றுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இதுபோன்ற சூழலில் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விலை அதிகரித்து வருவது மக்களை மேலும் கஷ்டப்படுகிறது.
தற்போதைய நிலையில் உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் டீசல் மீதான வரி மிக அதிகம்.பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.32.90 வரியும், டீசலுக்கு ரூ.31.80 வரியும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மாநிலத்துக்கு மாநிலம் மதிப்புக்கூட்டும் வரியும் அதிகமாக விதிக்கப்பட்டு 100 ரூபாய் வரை பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறையும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகள் தங்களது உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டமைப்பில் ஒரு நாளில் நான்கு லட்சம் பேரல் வரையில் உற்பத்தி உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உற்பத்தி உயர்த்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.