தற்போது அனைவரது வீட்டிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்து சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சிலிண்டர் திட்டம், சிலிண்டருக்கான மானியம் உள்ளிட்ட நிறைய சலுகைகள் உள்ளது. அதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது. சமையல் சிலிண்டருக்கான காப்பீடு வசதியும் உள்ளது. ஆனால் அது சிலருக்கு தெரிவதில்லை. ஏனென்றால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடிக்கக் கூடிய அபாயமும் உண்டு.
அவை இயல்பாகவே பாதுகாப்பானது என்றாலும் வாடிக்கையாளர்களின் கவனக்குறைவால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுகிறது. இதற்கு காப்பீட்டு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. லிண்ட இணைப்பை வழங்கும் எண்ணை நிறுவனங்கள் தரப்பில் இருந்து இந்த காப்பீடு கிடைக்கும். அதிகபட்சம் 50 லட்சம் வரை காப்பீடு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உதவியை வழங்குவதற்காக முன்னணி காப்பீடு நிறுவனங்களுடன் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.
வாடிக்கையாளருக்கு சிலிண்டர் வழங்கப்படும் போது அதன் நிலை குறித்து முதலில் பரிசோதனை செய்து தரப்படும். அதன் பிறகு ஏதேனும் விபத்து அல்லது பொருட் சேதம் ஏற்பட்டால் அதற்கு காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. பொருட் சேதம் ஏற்பட்டால் இரண்டு லட்சம் வரையில் காப்பீடு உங்களுக்கு கிடைக்கும். சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதன்பிறகு சிலிண்டர் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம். சிலிண்டர் இன்சுரன்ஸ் வாங்குவதற்கு FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் ஆகியவை தேவைப்படும்.