Categories
மாநில செய்திகள்

மக்களே! உங்க வீட்டில் குடிநீர் இணைப்பு இருக்குதா..? அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

குடிநீர் இணைப்பு பெறாத வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமங்கள்தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2023 வருடத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு டெபாசிட் பணத்தை கட்டியவுடன் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் இணைப்பு எந்தெந்த வீடுகளில் பெறப்படவில்லை என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்கவும் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தவும் ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |