மின்சார கட்டணத்தினை குறைக்கும் ஒரு புது சாதனம் சந்தையில் வந்திருக்கிறது. இச்சாதனம் ஒரு கொசு விரட்டி போல் உள்ளது. அத்துடன் இதனை நீங்கள் ஈஸியாக பவர் சாக்கெட்டில் சொருகி பயன்படுத்தலாம். ஆகவே இதுகுறித்து விரிவான தகவலை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த சாதனத்தை அமேசானில் இருந்து வாங்கலாம். இது ENVIROPURE HEAVY DUTY ELECTRICITY SAVER என பெயரிடப்பட்ட சிறிய சாதனம் ஆகும். இது மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையில் சந்தையில் இது போன்ற பல்வேறு சாதனங்கள் இருக்கிறது.
மக்கள் தங்களது வீடுகளின் மின்கட்டணத்தினை குறைத்து பயன்படுத்தி வருகின்றனர். எனினும் இதுபோன்ற சாதனத்தின் பெயரில் பலமுறை மோசடிகளும் நடக்கிறது. ஆகவே சாதனத்தை கவனத்துடன் வாங்க வேண்டும். அதே நேரம் நீங்கள் இலவச மின்சார உபயோகம் செய்ய விரும்பினால் வீட்டின் மேற் கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து தாராளமாக விடுபடலாம். சோலார் தகடுகள் பொருத்துவதற்கு கூடுதல் செலவு ஆகும். எனினும் இவை ஒன்டைம் இன்வெஸ்ட்மெண்ட் ஆகும்.