Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உடனே இத பண்ணுங்க…. இல்லனா வங்கி பணம் காணாம போயிடும்…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை….!!!

இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம்தான். எல்லாமே ஸ்மார்ட்போனில் அடங்கிவிட்டது. பணம் அனுப்புவதில் இருந்து பெறுவது வரை எல்லாமே ஸ்மார்ட் போனில்தான். ரொக்கப் பணத்துக்குரிய தேவையே இல்லாமல் போய்விட்டது. வளர்ந்து வரக்கூடிய டிஜிட்டல் மயத்தால் முன்னேற்றம் மற்றும் வசதிகள் நிறைய இருந்தாலும் அதில் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கின்றன. ஆன்லைன் நிதி மோசடிகள் பெரும்பாலானவை நடைபெறுகின்றன.

நமக்கே தெரியாமல் வங்கிக் கணக்கிலுள்ள பணம் நொடிப் பொழுதில் காணாமல் போய்விடுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுகுறித்து வங்கிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வந்தாலும், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. இந்த நிலையில் வங்கிக் கணக்கு விஷயத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களுடைய செல்போன் நம்பரையும், E-Mail ஐடியையும் வங்கிக் கணக்குடன் பதிவு செய்து வைக்குபடி ரிசர்வ் வங்கியானது கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து பணப் பரிவர்த்தனை நடைபெறாது பரிவர்த்தனை நடந்ததற்கான தகவல் SMS வாயிலாகவோ அல்லது ஈமெயில் வாயிலாகவோ வந்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

ஏடிஎம் நம்பர், பாஸ்வர்டு, ஓடிபி ஆகிய எந்தவொரு விவரத்தையும் மொபைல் போன் போன்றவற்றில் சேமித்து வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவை தொலைந்துவிட்டாலோ அல்லது திருட்டுபோனாலோ அவற்றை உடனே ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று பிளாக் செய்ய வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.

Categories

Tech |