Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க… இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு…. வெளியான அறிவிப்பு…..!!!!!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயா்களைத் எதிா்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் போற்றி பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பாக 3 அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. சென்னை, தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில் அந்த 3 அலங்கார ஊா்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் அந்த அலங்கார ஊா்திகள் பொதுமக்கள் பாா்வைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. அந்த வகையில் வேலூா் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி, ஆங்கிலேயா்களை எதிா்த்து வீரமுடன் போா்புரிந்த மருது சகோதரா்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலுநாச்சியாா், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்டோா் காட்சிதரும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊா்தியானது கலங்கரை விளக்கம் அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பின் மகாகவி பாரதியாா், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனாா், தியாகி சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரை போற்றும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 2-வது அலங்கார ஊா்தி கண்ணகி சிலை பின்புறம் அணுகு சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பெரியாா் ஈவெரா, மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா், கொடிகாத்த திருப்பூா் குமரன் உள்ளிட்டோரின் புகழை வெளிப்படுத்தும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 3-வது அலங்கார ஊா்தி விவேகானந்தா் இல்லம் எதிரில் அணுகு சாலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

பெரியாா் ஈவெரா, மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா், கொடிகாத்த திருப்பூா் குமரன் உள்ளிட்டோரின் புகழை வெளிப்படுத்தும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 3-வது அலங்கார ஊா்தி விவேகானந்தா் இல்லம் எதிரில் அணுகு சாலையில் காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் முன்னிட்டு மெரீனா கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்த மக்கள், இந்த அலங்கார ஊா்திகளைக் கண்டு களித்தனா். அவா்கள் இந்த ஊா்திகள் முன்பு செல்பி எடுத்துக் கொண்டனா். இந்த அலங்கார ஊா்திகள் அனைத்தும் இங்கு பிப்.23 ஆம் தேதி வரையிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன

Categories

Tech |