Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க… தமிழகம் முழுவதும் இன்று…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று 17வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை தடுப்பூசி போட தகுதியானவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி போட வேண்டியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நாளை  முதல் 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |