Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம், இந்த வாரம் கொரோனா ஊரடங்கு காரணமாக சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனால் தமிழகம் முழுவதும் இன்று 18ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் முதல் டோஸ் போட்டுவிட்டு இரண்டாவது டோஸ் போடாமல் இருப்பவர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |