Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே சொல்லுங்க….! சட்டவிரோத செயல்களை தடுக்க…. போலீசாரின் சூப்பர் முன்னெடுப்பு…!!!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து தகவல் அனுப்பும் படி காவல்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் பள்ளி. கல்லூரிகளுக்கு அருகில் நடக்கும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குட்கா, கஞ்சா, சட்ட விரோத லாட்டரி விற்பனை, சட்டவிரோத மணல் திருட்டு போன்றவற்றை ‘7200102104’ என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அம்மாவட்ட மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |