Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே போங்க…. அனைத்து விதமான கடன்களுக்கும் சிறப்பு சலுகை…. அசத்தலான அறிவிப்பு…..!!!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விழாக்காலம் தொடங்குவதை அடுத்து வாகனக் கடன், நகைக்கடன், தனிநபர் கடன் வழங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை  அறிவித்திருக்கிறது. அதன்படி கார் கடன் வாங்குபவர்களுக்கு 100 சதவீத பரிசீலனை கட்டணத்தை ரத்து செய்திருக்கிறது. மேலும், வங்கியின் செயலியான யோனோ மூலம் கார்லோன் வாங்கும் பட்சத்தில் 0.25 சதவீத வட்டி சலுகை அறிவித்திருக்கிறது. யோனோ வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 7.5 சதவீதத்தில் இருந்து கார் லோன் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது.

நகைக்கடனுக்கு 0.75 சதவீத வட்டியை குறைத்திருக்கிறது. ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியில் தங்க நகைக்கடன் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல யோனோ செயலி மூலம் கோல்ட் லோன் விண்ணப்பிப்பவர்களுக்கு பரிசீலனை கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

பர்சனல் லோனை பொறுத்தவரை, பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்கிறது. கொரோனா முன்கள பணியாளர்கள் பர்சனல் லோன் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வட்டியில் 0.50 சதவீத சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே சலுகை இதர கடன்களிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |