இந்தியாவில் அரிசி உற்பத்தி செய்யும் மேற்குவங்கம், பீகார், உத்திரபிரதேசம், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் மலைப்பொழிவு குறைந்துள்ளதால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் அரசு உற்பத்தியில் காரீப் பருவம் 85% பங்கு வைக்கிறது. 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரை 13 கோடி டன் அளவில் அரசு உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இது ஐந்து ஆண்டுகளில் சராசரி உற்பத்தியை விட 1.3 கோடி டன் அதிகமாகும். அரிசி உற்பத்தியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் அரிசி உற்பத்தி குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு தேவை பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு 20% வரி விதைத்துள்ளது.