Categories
உலக செய்திகள்

மக்களே உஷாராக இருங்கள்…. பிளேஸ்டோரில் இருந்து காணாமல் போன செயலி …. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை….!!!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த சீன கும்பலை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியே வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் ஆன்லைன் மூலம் வேலை தேடுகின்றனர். இதனை சில கும்பல்கள் பயன்படுத்தி பொதுமக்களிடம்  பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பணம் கட்டினால் பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரம் செய்துள்ளனர்.

இதனை நம்பி பணம் கட்டியவர்களை வேலையில் சேர்த்து மோசடி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கீப்ஷோர் என்ற  செயலியை  உருவாக்கி ஒரு கும்பல்  பணம் பறித்து வருகிறது. இந்நிலையில்  பெங்களூருவில் 12 இடங்களில் நிறுவனம் தொடங்கிய கும்பல் திடீரென பிளேஸ்டோரில் இருந்து செயலியை நீக்கிவிட்டனர்.இதனால்  பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் அமலாக்கத் துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனம் தொடங்கி  பல கோடி ரூபாய் மோசடி செய்தது  சீன கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |