Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… இந்த மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

தேனியில் பெய்யும் கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதனால் ஆற்றின் கரையோரமாக உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் கரையோரமாக உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Categories

Tech |