தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளைய தினம் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை அந்தமான் கடற்பகுதி, வங்கக்கடல் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற ஒரு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.