Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்…. மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்…!!!!

சென்னையில் புதிய காய்ச்சல் பரவுவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நமது சென்னையில் தற்போது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள்  அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காய்ச்சலானது குழந்தைகளுக்கு சளி, மற்றும் இருமல் ஆகியவை மூலமாக பரவுகிறது. இந்நிலையில் காய்ச்சல் 2  அல்லது 3 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2  வாரங்களுக்கு நீடிக்கிறது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேன் வெது வெதுப்பான சுடுநீரில் கலந்து பெற்றோர் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது. வானிலையில் நிலவும் மாற்றம் காரணமாக சமீப காலத்தில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலே இருக்க வேண்டும் என்ற நடைமுறை விதிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு கணிசமாக குறைந்தது. ஆனால் தற்போது அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதனால் வைரஸ்கள் வேகமாக பரவுகிறது. மேலும் தற்போது சுவாச நுண் குழல் அழற்சி  வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்கள்  வருகிறது. இதனால்  கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும்  களைப்பு, தலைவலி, உடல் வலி, வறட்சி, வாந்தி, வயிற்றுவலி ஆகியவை ஏற்படுகிறது. எனவே  பொதுமக்கள் எப்பொழுதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |