Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… கொரோனாவால் பார்வை போன சிறுமி…. உறுதி செய்த மருத்துவமனை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடனும் அதன்பிறகு அறிகுறி இல்லாமலும் தொற்று பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனை தெரியாமல் தொற்று பரவ தொடங்கியது. அதோடு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் டெல்லியில் இந்நிலையில் கொரோனா தொற்றினால் சிறுமி ஒருவரின் நரம்பு பாதிக்கப்பட்டு கண்பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பக்க விளைவுகள் கொரோனாவால் ஏற்படுவது முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அந்த 11 வயது சிறுமியின் மூளை நரம்பு தொற்றினால் சேதம் அடைந்திருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறுமிக்கு நோய் பாதிப்பு குறித்த அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.

Categories

Tech |