சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால் 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்நிலையில் வருகின்ற 1-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனையடுத்து சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.