Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. வெளியான எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்னும்  24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் வரை நீடிக்கும். இந்நிலையில் பருவமழை தொடக்கம் காரணமாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட  தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லூர் முதல் கடலூர் வரை மிக கனமழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாடு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை,தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் ஓரிரு  இடங்களில் கன மழை பெய்யும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |