மருத்துவர் ஒருவர் தலையணையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் இல்லையென்றால் என்னாகும் ?என்பது பற்றிய வீடியோவை பதிவிட்டுள்ளார் .
பிரிட்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கரண் ராஜன் என்ற மருத்துவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையணையை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார் .அதற்க்கு அவர் விளக்கம் அளித்த விடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் அதில் கூறுகையில், மனிதன் ஆண்டொன்றுக்கு நான்கு கிலோ இறந்த செல்களை இழப்பதாக கூறியுள்ளார்.அந்த உதிர்ந்த செல்களினால் ‘டஸ்ட் மைட்ஸ் ‘ எனும் பூச்சிகள் உருவாகி அதிலிருந்து வெளிவரும் கழிவுகள் நமது தலையணையில இருக்கும்.
அந்த தலையணையை நாம் பயன்படுத்துவதால் நமக்கு சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.ஏற்கனவே நமது தலையணையில் நம்மளுடைய வியர்வை மற்றும் தலையில் உள்ள எண்ணெய் எல்லாம் அதில் சேர்ந்து பாக்டரியாக்கள் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் நம்மளுடைய தலையணை உயிருடன் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அது எவ்வாறு என்றால், நாம் தலையணையை இரண்டாக மடித்து அது மீண்டும் பழைய நிலைமைக்கு தானாக வரவில்லை என்றால் அந்த தலையணை இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார் .இவரின் இந்த வீடியோ பதிவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு அது வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CL9a47nhSg0/?utm_source=ig_web_copy_link