Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தீபாவளியில் “இதை மட்டும் செஞ்சுராதீங்க”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சில  அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில்

1.பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
2. காலை 6:00 மணி முதல் காலை 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

3. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 89 ன் படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4  கிலோ மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவிற்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவும், பயன்படுத்தவும் கூடாது. மேலும் கடையின் உரிமையாளர்கள் சீன தயாரிப்பு வெடிகளை விற்பனை செய்யக்கூடாது.

3. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால் வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே பட்டாசுகளை கொளுத்தி தூக்கி விளையாட கூடாது.

4. மக்கள் அதிக நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது.

5. பட்டாசுகளை வெடிக்கும் பொழுது  டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். இதனால் பல விபத்துகள் நடக்கும். எனவே மக்கள் தயவு செய்து அப்படி பட்டாசுகளை வெடிக்க கூடாது.

6. குடிசை பகுதிகள், மாடி கட்டிடங்கள் அருகில் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது.

7. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.

8. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்த கூடாது.

9. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்களை  கொழுத்து அனுமதிக்காதீர்கள்.

10. எக்காரணம் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலை கூரைகள் உள்ள இடங்களில் அருகிலோ வான வெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

11. பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகை பிடிப்பதோ, புகைத்து முடித்த பின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிய கூடாது.

12. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையும் உபயோகிப்பதை  விட நீளமான ஊர்வசி உபயோகித்து ஆபத்துக்களை தவிர்க்கவும்.

13. கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது மோதி விபத்துக்களை ஏற்படுத்தலாம். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

14. தீ விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து பெருநகர காவல் துறை அறிவித்துள்ள மேற்கூறிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்நிலையில் தீ விபத்து அல்லது பட்டாசுகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அவசர உதவியை 112, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் 108 ஆகிய எண்களை  உடனடியாக தொடர்பு கொண்டு ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறி உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்ததற்கு எதிராக 184 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடிப்பதற்காகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்   தீபாவளி கொண்டாடும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |