கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து டெல்லிக்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பூங்காக்கள், பொது மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் காக்கைகள் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருக்கும் பரிசோதனை மையத்துக்கு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருக்கக்கூடிய பரிசோதனை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பறவைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி முடிவுகளில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகியிருக்கிறது. இதனால் தலைநகர் டெல்லியிலும் ஒன்பதாவது மாநிலமாக பறவை காய்ச்சல் பரவி இருக்கிறது.
நாடு முழுவதும் கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் ஏற்கனவே பரவி இருந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியிலும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்த நிலையில் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அவர்களுக்கான எச்சரிக்கைகள் என்பது கொடுக்கப்படுகின்றது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி முதல்வர் மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அடுத்த அடுத்த பத்து நாட்களுக்குள் கோழி உட்பட இறைச்சி வகைகளை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறியிருந்தார்.
டெல்லியிலிருந்து இந்த கூடிய மிக முக்கியமான பெரிய அளவிலான மாமிச மார்க்கெட்டுகள், பறவைகள் ற்பனை செய்யக்கூடிய கூடங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் டெல்லியில் பறவை காய்ச்சல் பரவி இருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் பறவை காய்ச்சலால் பரவிய போது ஏற்கனவே இதற்கான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே அதனையே பயன்படுத்தவும் மாநகராட்சி மற்றும் விலங்குகள் நல அமைப்பு ஆகியவை இணைந்து இந்த பறவைகளை சமாளிப்பதற்கான திட்டங்களும் வைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் டெல்லி அரசு சார்பில் மிக முக்கியமான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.