Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கியதால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்புகின்றன. இந்நிலையில் 71 அடி உயர் மட்டம் கொண்ட வைகை அணை 66 அடியை எட்டியதால் 5 மாவட்டங்களுக்கு முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை அணைக்கு 1,594 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், நீர் இருப்பு 4,839 கன அடியாக உள்ளது.

Categories

Tech |