Categories
உலக செய்திகள்

“மக்களே உஷாரா இருங்க!”…. ‘Omicron’ ஆபத்தான 14 அறிகுறிகள்?… சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதாரத்துறை மக்களுக்கு ஒமிக்ரான் வைரசின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒமிக்ரானின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் :-

* ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் முதன்மை அறிகுறியாக 73 சதவீதம் பேருக்கு ‘மூக்கு ஒழுகுதல்’ காணப்பட்டுள்ளது. அதேபோல் 68 சதவீதம் பேருக்கு தலைவலியும், 30 சதவீதம் பேருக்கு குளிரும், 29 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 28 சதவீதம் பேருக்கு தலைசுற்றலும் ஏற்பட்டுள்ளது.

* ஒமிக்ரானின் அறிகுறிகளாக 64 சதவீதம் பேருக்கு உடல் சோர்வும், 60 சதவீதம் பேருக்கு தும்மலும், 60 சதவீதம் பேருக்கு தொண்டையில் தொற்றும், 44 சதவீதம் பேருக்கு இருமலும், 36 சதவீதம் பேருக்கு தொண்டை கட்டுதலும் ஏற்பட்டுள்ளது.

* அதேபோல் 24 சதவீதம் பேருக்கு மூளை மழுங்கி போதல், 23 சதவீதம் பேருக்கு சதை பிடிப்பு, 19 சதவீதம் பேருக்கு வாசனை இழப்பு, 19 சதவீதம் பேருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது என்று மூத்த மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

* அதோடு மட்டுமில்லாமல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் “மூக்கு ஒழுகுதல்” அதிகம் பேருக்கு காணப்பட்டுள்ளது. அதேபோல் நெஞ்சு வலியும் ஒரு சிலருக்கு அறிகுறியாக இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |