நெல்லையில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் படுபவர்கள் பகல் நேரங்களில் நன்றாக இருப்பதாகவும், மாலை நேரங்களில் இந்த காய்ச்சல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் அறிகுறிகளாக தலை சுற்றல், தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பாதிப்புடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மர்ம காய்ச்சலுக்கு நெல்லை மாநகராட்சி பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.அதில் மேலப்பாளையம் ராஜா நகரைச் சேர்ந்த மாடசாமி மனைவி சத்யா (26) என்பவர் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளார்.