Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த ஆபத்து… “பன்றிகளை உடனே கொல்லுங்க”… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!!

திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து  பன்றிகளையும் கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தை அடுத்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையில், பா.ஜ., – திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து, தொற்று ஏற்பட்ட பன்றிகளை அழிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இது பற்றி, மாநில விலங்குகள் நல மேம்பாட்டு துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், செபாஹிஜலா மாவட்டத்தில், அரசு நடத்தும் பண்ணையில் உள்ள, 60 பன்றிகள் திடீரென இறந்துள்ளது.இதையடுத்து, பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொற்று பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், ஆப்ரிக்க வகை பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாநிலத்தில் தொற்று பரவியுள்ள அனைத்து பன்றிகளையும் கொன்று புதைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |