Categories
உலகசெய்திகள்

மக்களே உஷார்… அடுத்த ஆபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஈராக் நாட்டின் சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் செய்தி ஒன்றை  வெளியிட்டிருக்கின்றார். அந்த  செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் ஈராக்கில் ரத்த கசிவை ஏற்படுத்தும் வகையிலான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் பாதிப்பு உறுதியானால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்திருக்கின்றார்.

முதன் முறையாக கடந்த மாதத்தில் தி குவார் என்பவருக்கு  இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் பின் மற்ற மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ரத்த கசிவு வைரஸ் காய்ச்சலானது எபோலோ வைரஸ் போன்ற பல்வேறு குழுக்களாக உள்ள வைரஸ்களால் ஏற்படுகிறது. இதனால் மனிதர்களின் உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து பாதிப்புக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படும். இதுவரை ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த பாதிப்புகளுக்கு எந்தவிதமான வைரஸ்கள் காரணம் என்பதை பற்றி  ஈராக்கிய சுகாதார அமைச்சகம் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

Categories

Tech |