Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. “அடுத்த ஆபத்து”…. உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்வு…!!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவக்கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. வருடத் தொடக்கத்தில் இருந்து 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுதவிர 4,939 பேருக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் நடப்பு ஆண்டு ஜூன் வரையில் நாட்டில் பதிவான 155 என்ற உயிரிழப்பு எண்ணிக்கையானது 19.8 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 20.2 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் 24 மாநிலங்களில் குறைந்தது ஒருவருக்காவது தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒண்டோ, இடோ  மற்றும் பாச்சி ஆகிய 3 மாநிலங்களில் உறுதியான தொற்று  அளவு மொத்தத்தில் 68 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. லாசா என்னும் ஒருவகை வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனால் ரத்த இழப்பு ஏற்படும்.

மேலும் வீட்டின் உணவு அல்லது பொருட்களின் மீது மேஸ்டோமிஸ் எனும் ஒருவகை எலிகளின் கழிவுகள் கலக்கும்போது மனிதர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. லாசா காய்ச்சலானது சில சமயங்களில் மலேரியாவை ஒத்த அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரை அறிகுறிகள் இருக்கும். மேலும் லேசான அறிகுறிகளாக காய்ச்சல், மயக்கம், பலவீனமடைதல் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |