வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.