கர்நாடக மாநிலத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாத நிலையில்,கர்நாடகாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனால் மக்கள் சற்று கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த வாரம் பெய்த கனமழைக்கு பல லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் 197 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 167 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.