கர்நாடகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை சுமார் ரூ. 221 கோடி மதிப்பிலான இணையவழி மோசடி நடந்துள்ளது. ஆனால் ரூ. 40 கோடி மட்டுமே இணையவழி மோசடியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் ரூ. 104 கோடியை சைபர் மோசடி மூலம் இழந்துள்ளனர். அதிலிருந்து ரூ.24 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.68 கோடி ஓ.டி.பி. (ஒன் டைம் பாஸ்வேர்ட்) எண் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ரூ. 18 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் ரூ.47 கோடிக்கு சமூக வலைதளம் மூலம் மோசடி நடந்த நிலையில் ரூ.4 கோடி மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கர்நாடகத்தில் இணைய வழி மோசடி கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கிடையே சைபர் கிரைம் போலீசார் தினமும் சராசரியாக ரூ. 19 லட்சத்திற்கு இணைய வழி மோசடி நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.