Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அதிக மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற 16-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்நிலையில் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக மற்றும் புதுச்சேரியில் 253. 3 மி. மீ அளவுக்கு மழை இயல்பாக பதிவாக வேண்டும். ஆனால் இயல்பை தாண்டி 455.2 மி. மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனால்  அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |