Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….! “அது நான் இல்லை” யாரும் ஏமாறாதீங்க…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு …!!!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியின் பெயர் மற்றும் அவருடைய போட்டோவை வைத்து 706 16 56848 என்ற நம்பரிலிருந்து மாவட்ட அலுவலர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ,இது என்னுடைய புதிய எண். இதில் உள்ள கிஃப்ட் கூப்பன் 10,000. எனவே உடனடியாக 10 கார்டு வாங்குங்கள் என்று வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவிக்கையில், என்னுடைய பெயரில் வாட்ஸ்அப் மெசேஜ் வருவதாக புகார் வந்துகொண்டிருக்கிறது. அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது போலியானது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |