Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆன்லைன் டேட்டிங் செயலியால் ஆபத்து…. அதிர்ச்சி தகவல்…!!!

ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரம் நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. இதுகுறித்து இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் டேட்டிங் செயலியில் 27 சதவீதம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், 36% மோசடி செய்கிறார்கள் என்றும், 36 சதவீதம் பேரிடம் தரவுகள் திருடப்பட்டுள்ளது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆன்லைன் டேட்டிங் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

இது குறித்து கேஸ்பர்ஸ்கை பாதுகாப்பு ஆய்வாளர் டேவிட் ஜேகோபி கூறுகையில், டேட்டிங் ஆப்கள் பயன்பாடு அச்சம் நிறைந்ததாகவே உள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தெரியாது என்பதே அந்த அச்சத்திற்கான தொடக்கம் என்றும் தெரிவித்தார். டேட்டிங் ஆப்களில் போலி கணக்குகள் மூலம் 33 சதவிகிதத்தினரும், வைரஸ் நிறைந்த லிங்க்குகள் மற்றும் தரவுகள் மூலம் 38 சதவிகிதத்தினரும், தரவுகள் திருடப்படுவதாக 36 சதவிகிதத்தினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.வீடியோ  அழைப்புகளுக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலம் சந்தேகம் ஏற்படுவதாக 29 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |