நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் மும்பையில் ஷ்ஸ்வதி என்ற என்ற பெண் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள தன் உறவினருக்கு பிளாஸ்மா தானம் கேட்டு ட்விட்டரில் மொபைல் எண்ணை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை எனக்கு வாட்ஸ் அப் மூலம் சிலர் ஆபாச புகைப்படங்களை அனுப்பி உள்ளனர். ஆபாச அழைப்புகளும் தொடர்ந்து வந்துள்ளன. சிலர் அந்த போன் நம்பரை ஆபாச தளத்திலும் கொடுத்துள்ளனர். இதனால் ஆபத்துக்கு கூட போன் நம்பர் தராதீர்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.