ஆப்கள் மூலமாக பயனர்களின் விவரங்கள் திருடப்படுவதாக பேஸ்புக் அதிர்ச்சி தகவல்களை உள்ளது.
நவீன உலகில் செல்போன் மற்றும் கணினியின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் விளையாட்டுக்கள் பி பி எண்கள் புகைப்பட டிசைன்கள் போன்ற பிற பயன்பாட்டிற்காக செல்போன் மற்றும் கணினியில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிக கவனமுடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. facebook நிறுவனத்தின் மெட்டா அமைப்பு வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் ஆப்பிள் மற்றும் கூகுள் செயலிகள் மையத்தில் என மொத்தம் 42 தீங்கு விளைவிக்கும் செயலிகள் கண்டறியப்பட்டிருக்கிறது.
இவற்றில் 355 ஆண்ட்ராய்டு தளங்களிலும் 47 ஐஓஎஸ் தளங்களிலும் இயங்கக்கூடியது. மேலும் இவை பயனாளர்களிடம் மோசடி செய்வதற்கு என பல தந்திரங்களை கையாண்டு வருகிறது. போலியான விமர்சனங்கள் மற்றும் வாக்குறுதிகளை அளித்து அவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்ய தூண்டுகிறது. இதனால் உங்களது பணம் மற்றும் லாகின் செய்யக்கூடிய விவரங்கள் திருடப்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த செயலிகள் பதிவிறக்கத்தின் போது பேஸ்புக் வழியில் லாகின் செய்யுங்கள் என்பன போன்ற விஷயங்களுக்கு பயனர்கள் தூண்டப்படுகின்றார்கள்.
இதனால் என்ன நோக்கத்திற்காக செயலியை திறக்கிறோமோ அதனை செய்வதற்குள் திசை திருப்பி விடப்படுகின்றீர்கள் ஒருவேளை facebook விவரங்களை பகிர்ந்து கொண்டால் அதன் பின் அவை திருடப்படுவது சாத்தியம். தங்களது கணக்கு மற்றும் பிற விவரங்களை பயனாளர்கள் தெரியாமல் பகிர்ந்து கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்படுகிறது என facebook அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. இருப்பினும் இந்த செயலிகள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் மையங்களில் முதல் இடத்தில் இருக்கின்றன எனவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.