Categories
தேசிய செய்திகள் மருத்துவம்

மக்களே உஷார் …இது உங்களுக்கு தான் …!!

நம்  நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் 37 வகை மருந்துகள் தரமில்லாதவை  என்று  மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது .

நாட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் , எல்லா  வகையான மருந்துகளையும் , மாத்திரைகளையும் , மத்திய மற்றும்  மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் . அதன்பேரில்  நவம்பர் மாதம் , 1,158 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் , அதில்,  1,121 மருந்துகள்  தரமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும்,மீதமுள்ள  , குடற்புழு நீக்கம், வயிற்று உபாதைகள்,வாயுப் பிரச்னை, போன்றவற்றிற்கு  பயன்படுத்தப்படும், 37வகையான  மருந்துகள், தரமற்றவை என்றும் போலியானவை என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை , மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம், cdscoonline.gov.in என்ற இணையதளத்தில் பதிவிட்டு வெளியிட்டுள்ளது .

Categories

Tech |