இது வரை இல்லாத அளவிற்கு தொற்று திறனுடன் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயமாக்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் தொற்று திறனுடன் புதிய வகை கொரோனா பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காற்றில் ஒரு மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்றும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொற்றும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.