Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இதை நம்பி யாரும் ஏமாறாதீங்க…. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை….!!!!

பொதுமக்கள் தங்கள் செல்போனில் வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த சில நாட்களாகவே பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு பிரபல நிறுவனங்கள் மூலமாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. அதில் பிரபல நிறுவனங்களில் பார்ட் டைம் வேலை செய்து 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று மோசடி நபர்களால் தகவல் அனுப்பப்படுகிறது.

அதில் ஒரு லிங்கும் இணைக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்த உடனே ஒரு செயலி செல்போனில் பதிவேற்றம் ஆகிறது. அதில் ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறி பணமோசடி நடைபெறுகிறது.அதனால் இது போன்ற செய்திகளை நம்பி யாரும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்றும் பகுதி நேர வேலை என்று எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் அனுப்பும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் செல்போனில் வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |