Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… வயாகரா மாத்திரை பயன்படுத்தினால் பெரும் ஆபத்து…. வெளியான ஆய்வு முடிவுகள்…!!!!!!

வயாகரா மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்துவதால் பார்வைக் கோளாறு ஏற்படும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கனடாவின் வான்கூவரிலுள்ள  பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் வயாகரா மற்றும் cialis போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை விட கண்பார்வை பாதிப்பு ஏற்படும் பிரச்சனை உருவாக 85 சதவிகிதம் அதிக வாய்ப்பு  உள்ளதாக தெரியவந்திருக்கிறது.

இப்படி வயாகராவால்  கண்பார்வை இழப்பு அல்லது வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் இந்த பக்க விளைவு குறித்து அதிக அளவில் பேசப்படவில்லை என அந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அதனால் வயாகரா போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வோர் தங்களுக்கு கண் பார்வையிலிருந்து பிரச்சினை ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த வயாகரா முதலான மாத்திரைகள் பாலின உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில் உடலின் மற்ற பாகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்க இயலும் என்பதனால் கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |