நம் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது மிகவும் சிரமம். அவ்வாறு வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை குளிர்காலங்களில் தவிர கோடை காலங்களில் அதிக வெப்பம் உணரும்போது நாம் அனைவரும் குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். அவ்வாறு தண்ணீரை கூட்டுவதற்கு ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். பிறகு நமக்கு தாகம் எடுக்கும்போது ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே எடுத்து குடிக்கிறோம். அப்படி குடித்தால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்ததை போல் நாம் உணர்கிறோம்.
அவ்வாறு நாம் குளிர்ந்த ஐஸ் தண்ணீரை குடிக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்னவென்று அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். நாம் குளிர்ந்த தண்ணீரை குடிப்பதால் இதயத்திற்கு செல்லும் நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்து இதயத் துடிப்பு குறையும் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் ஐஸ் தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்தில் மீண்டும் தாகம் ஏற்படும். இதற்கு காரணம் உடல் சூட்டை தணிக்க நீர் அதிகமாக உறிஞ்சி நீர் பற்றாக்குறையை உண்டாக்கும். அதனால் குளிர்ந்த நீரை குடிப்பதை விட சாதாரண நீரை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.