பொதுமக்கள் வண்ண நிறத்தில் இருக்கும் வெல்லங்களை பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தேவைக்காக பயன்படுத்தும் வெல்லத்தை அடர் அரக்கு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள், அடர் மஞ்சள், போன்ற நிறங்களில் இருக்கும் வெல்லங்களில் வேதி பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வெல்லங்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு, போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அடர் அரக்கு நிறத்தில் இருக்கும் வெல்லங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் உணவுப் பொருள்கள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் ஆட்சியர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.