Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக தீவிரம்… உச்சகட்ட அதிர்ச்சி தரும் செய்தி…!!!

இந்தியாவின் 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.

அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனவைரஸ் 18 மாநிலங்களில் பரவ தொடங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர்,சண்டிகர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் 45 வயது வரையுள்ள இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டு வந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. எனவே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |