மீண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதை போல் இந்த ஆண்டு மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நமது தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் 168 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகமான பாதிப்பு சென்னையில் உள்ளது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் இதுவரை 2200 பேரும், டெல்லியில் ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.