Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்…. இந்த அறிகுறி இருந்தா உயிருக்கே ஆபத்து… உடனே மருத்துவரை பாருங்க…!!!

உங்கள் உடம்பில் ஏற்படும் சாதாரணமான பிரச்சினைகளும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் உணவு முறைகள் சரியாக இல்லாததால் பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக புற்று நோயை அதிக அளவு ஏற்படுகிறது. வயிற்று வலி மட்டுமே வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறி இல்லை. நாம் சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகளும் அதன் அறிகுறிகள் தான். ஒருவருக்கு மலம் கழிக்கும் போது ரத்தம் கலந்து வந்தால் அல்லது இரத்த வாந்தி எடுத்தால் அது வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறி. பசியின்மை வயிற்றுப் புற்று நோயின் அறிகுறிகள் முக்கியமான ஒன்று.

அதிலும் குறிப்பாக அதிகம் எதுவும் சாப்பிடாமல் வயிறு நிறைந்ததை போன்று நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். அடிக்கடி கடுமையான வயிற்று வலி வயிற்றுப் புற்று நோய்க்கான அறிகுறி. தினந்தோறும் எந்த ஒரு டயட் இல்லாமல் உடல் எடை குறைந்தால், அதனை சாதாரணமாக நினைக்காதீர்கள். திடீரென உடல் எடை குறைவதும் வயிற்று புற்று நோயின் மிக முக்கிய அறிகுறி.

மேலும் அடிக்கடி நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வயிற்றுப் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைந்தால், வயிற்று உப்பசம் மற்றும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லையென்றால் அது உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

Categories

Tech |